Tamil Seithi Sevai
  Home    About Us    Contact Us
Login    |   Subscribe

பாக்., தோல்வி: விசாரணை குழுவில் அக்ரம்

விளையாட்டு | Mon, 08 Feb 2010 02:20 PM IST

கராச்சி, பிப்.8 (டிஎன்எஸ்) முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் பாகிஸ்தான் தோல்வி குறித்து நியமிக்கப்பட்டுள்ள விசாரணை குழுவில் சேர்க்கப்பட்டுள்ளார். குழுவின் தலைவரான வாசிம் பாரி இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட், ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்ததையடுத்து, இது குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த 6 நபர் குழுவில் முன்னாள் கேப்டன் அக்ரமும் சேர்க்கப்பட்டு இருக்கிறார். குழுவின் தலைவரான வாசிம் பாரி இந்த தகவலை தெரிவித்துள்ளார். இந்த குழு வரும் வெள்ளிக்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தும் என்றும், அதன் பிறகு விசாரணைக்கான வழிமுறைகள் வகுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். (டிஎன்எஸ்)

Home  |  About Us  |  Contact Us  |  Subscribe