Tamil Seithi Sevai
  Home    About Us    Contact Us
Login    |   Subscribe

ஐபிஎல்: அரசுக்கு ரூ.200 கோடி லாபம்

வணிகம் | Mon, 15 Mar 2010 12:44 AM IST

புதுதில்லி, மார்ச்.15 (டிஎன்எஸ்) ஐபிஎல் டுவென்டி-20 சீசன் 3 போட்டிகள் மார்ச் 12ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகின்றன. இப்போட்டிகளின் வரித்தொகை மூலம் அரசுக்கு ரூ.200 கோடிக்கு மேல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிரிக்கெட் வீரர்கள், அம்பயர்கள், பயிற்சியாளர்கள், வர்ணனையாளர்கள், விளம்பரதாரர்கள் உள்ளிட்டவர்களின் வருமான வரி மூலம் அரசுக்கு பெருமளவில் லாபம் கிடைக்கும் என மத்திய நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் நேரடி வரி மற்றும் சேவை வரி மூலம் ரூ.100 கோடி லாபம் கிடைக்கம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.(டிஎன்எஸ்)

Home  |  About Us  |  Contact Us  |  Subscribe