Tamil Seithi Sevai
  Home    About Us    Contact Us
Login    |   Subscribe

ஆப்கனிஸ்தான்: 4 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்-30 பேர் பலி

தேசியம் | Sun, 14 Mar 2010 02:53 PM IST

கண்டகார், மார்ச்.14 (டிஎன்எஸ்)  ஆப்கானிஸ்தானில் முக்கிய நகரமான கண்டகாரில் நேற்று (மார்ச்.13)இரவு அடுத்தடுத்து 4 இடங்களில் தலிபான்கள் மனித குண்டு தாக்குதலை தலிபான் தீவிரவாதிகள் நடத்தியுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளை ஆட்சியில் இருந்து அகற்றிவிட்டாலும் அவர்கள் அட்டகாசத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
 
தினமும் ஏதாவது ஒரு இடத்தில் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தி ஆப்கானிஸ்தானை நிலைகுலைய செய்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் முக்கிய நகரமான கண்டகாரில் நேற்று இரவு அடுத்தடுத்து 4 இடங்களில் தலிபான்கள் மனித குண்டு தாக்குதலை நடத்தினார்கள்.
 
முதலில் அங்குள்ள ஜெயிலில் இந்த தாக்குதல் நடந்தது வெடிகுண்டு நிரப்பிய காரை ஓட்டி வந்த மனித குண்டு தீவிரவாதி ஜெயில் வாசலில் காரை மோதி வெடிக்க செய்தான்.  இந்த ஜெயிலில் ஏராளமான தலிபான் தீவிரவாதிகள் இருந்தனர். அவர்களை விடுவிக்கும் நோக்கத்துடன் தாக்குதல் நடந்தது.
 
அடுத்ததாக சைக்கிளில் வந்த மனிதகுண்டு தீவிரவாதி ஒருவன் போலீஸ் வாகனத்தில் மோதி வெடிக்க செய்தான்
 
3-வது தாக்குதல் திருமண விழா ஒன்றில் நடந்தது. 4-வது தாக்குதல் போலீஸ் தலைமை அலுவலத்தில் நடந்தது. 4 தாக்குதலிலும் 30 பேர் பலியானார்கள். 46 பேர் படுகாயம் அடைந்தனர்.
 
அடுத்தடுத்து தாக்குதல் நடந்ததால் கண்டகார் நகரம் முழுவதும் பீதி நிலவியது. (டிஎன்எஸ்)

Home  |  About Us  |  Contact Us  |  Subscribe