Tamil Seithi Sevai
  Home    About Us    Contact Us
Login    |   Subscribe

முதல்வர் சார்பில் பிரதமருக்கு நன்றி

சென்னை | Wed, 10 Mar 2010 11:38 AM IST

சென்னை, மார்ச்.10 (டிஎன்எஸ்) மகளிர் மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்றியமைக்காக முதலமைச்சர் மு கருணாநிதி சார்பில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை, திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி ஆர் பாலு நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து கொண்டார். 

அப்போது பிரதமர் மன்மோகன்சிங், இந்த மகளிர் மசோதாவை நிறைவேற்றுவதற்கு, திமுக ஆதரவு தெரிவித்தமைக்காக முதலமைச்சர் மு கருணாநிதிக்கு தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டதாக அரசு செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. (டிஎன்எஸ்)

Home  |  About Us  |  Contact Us  |  Subscribe