புதுதில்லி, மார்ச்.10 (எடின்எஸ்) மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் நடப்பு நிதியாண்டில் ரூ. 5400 கோடி இழப்பை சந்திக்கும் என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் பிரபுல் படேல் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் இது தொடர்பாக பேசிய அவர், இந்த நஷ்டம் அடுத்த சில ஆண்டுகளுக்கு தொடரும் என்றும் கூறியுள்ளார். இந்த நிறுவனம் எப்போது லாபம் ஈட்டும் என்பதை அவர் தெரிவிக்காமல் விட்டுவிட்டார்.
ஏர் இந்தியா நிறுவனம் 2007-08ம் ஆண்டில் 2226 கோடி ரூபாயும், 2008-09ம் ஆண்டில் 5548 கோடி ரூபாயும் இழப்பை சந்தித்ததாக அவர் தெரிவித்தார்.
ஏர் இந்தியா நிறுவனத்தின் நஷ்டத்தை சரிகட்ட மத்திய அரசு அந்த நிறுவனத்திற்கு 800 கோடி ரூபாய் ஒதுக்கிடு செய்ய கடந்த மாதம் அரசு ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது. (டிஎன்எஸ்)