Tamil Seithi Sevai
  Home    About Us    Contact Us
Login    |   Subscribe

ஐபிஎல்: டெக்கான் சார்ஜர்ஸ் அசத்தல் வெற்றி

விளையாட்டு | Mon, 15 Mar 2010 12:55 AM IST

சென்னை, மார்ச்.15 (டிஎன்எஸ்)  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது டெக்கான் சார்ஜர்ஸ் அணி.

ஐபிஎல் டுவென்டி-20 சீசன் 3 கிரிக்கெட் போட்டியின் 2ஆவது ஆட்டம் நேற்று (மார்ச்.14) இரவு எட்டு மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது.

இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெக்கான் சார்ஜர்ஸ் அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற டெக்கான் சார்ஜர்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து முதலில் களமிறங்கியது.

இதையடுத்து தனது ஆட்டத்தை துவக்கிய டெக்கான் சார்ஜர்ஸ் 20ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 190 ரன் எடுத்தது. அந்த அணியின் சைமண்ட்ஸ் அதிகபட்சமாக 50 ரன் எடுத்தார்.

191 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 9விக்கெட்டுகளை இழந்து 159 மட்டுமே எடுத்து பரிதாபமாக தோற்றது. இதன்மூலம் டெக்கான் சார்ஜர்ஸ் அணி 31 ரன் வித்தியாசத்தில் தொடரின் முதல் வெற்றி பெற்றது. (டிஎன்எஸ்)

Home  |  About Us  |  Contact Us  |  Subscribe