Tamil Seithi Sevai
  Home    About Us    Contact Us
Login    |   Subscribe

பென்னாகரம் இடைத்தேர்தல் : இறுதி பட்டியல் வெளியீடு

தமிழ்நாடு | Sat, 13 Mar 2010 07:16 PM IST

தர்மபுரி, மார்ச்,13 (டிஎன்எஸ்) பென்னாகரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, மெதத்தம் 31 பேர் போட்டியிடுகின்றனர்.

இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ரவி மற்றும் தேமுதிக மாற்று வேட்பாளர் செந்தில் குமார் ஆகியோரின் வேட்புமனுக்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

இறுதி பட்டியலின்படி, திமுக சார்பில் இன்பசேகரன், அதிமுக சார்பில் அன்பழகன், பாமக சார்பில் தமிழ் குமரன், தேமுதிக சார்பில் காவேரி வர்மன், உழைப்பாளி மக்கள் கட்சியின் சார்பில் வஜ்ரவேல், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி சார்பில் சாமிகண்ணு மற்றும் 25 சுயேட்சைகள் போட்டியிடுகின்றனர்.

முன்னதாக வேட்புமனு தாக்கல் கடந்த 3ஆம் தேதி தொடங்கி 10ஆம் தேதி வரை நடைபெற்றது.

பென்னாகரம் தொகுதி இடைத் தேர்தல் வருகிற 27ம் தேதி நடக்கிறது.  (டிஎன்எஸ்)

Home  |  About Us  |  Contact Us  |  Subscribe