பென்னாகரம், மார்ச்.9 (டிஎன்எஸ்) இடைத்தேர்தல் நடைபெறவுள்ள பென்னாகரம் தொகுதியில் பிரசாரம் செய்ய பா.ம.க.,வின் அன்புமணி ராமதாஸ் வாகனத்தில் வந்தபோது இன்டூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் வாகனத்தை சோதனை செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.
இதற்கு அங்கிருந்த பாமக-வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைதொடர்ந்து அவர்களுக்கும் போலீசாருக்கும் கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் போலீசார் தடியடி நடத்தினர். இதில் 4 பா.ம.க.,வினர் படுகாயமடைந்தனர். 7 போலீசாருக்கு லேசான காயமேற்பட்டுள்ளது. காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. (டிஎன்எஸ்)