Tamil Seithi Sevai
  Home    About Us    Contact Us
Login    |   Subscribe

தங்கம் விலை கிடுகிடு சரிவு

வணிகம் | Sat, 06 Feb 2010 11:15 AM IST

சென்னை, பிப்.6 (டிஎன்எஸ்) கடும் வேகத்தில் அதிகரித்து வந்த தங்கம் விலை நேற்று (பிப்.5) ஒரே நாளில் பவுனுக்கு ரூ.424 குறைந்தது. ஒரு பவுன் ரூ.12 ஆயிரத்து 8 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. `ஜெட்' வேகத்தில் அதிகரித்து வந்த தங்கத்தின் விலை, தற்போது வீழ்ச்சி அடைந்து வருவது நகை பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக `புயல்' வேகத்தில் அதிகரித்து வந்தது. காலையில் குறைந்த அளவில் விலை உயரும் தங்கம், மாலையில் அதிக அளவில் உயர்ந்து வருவது அன்றாட கதையாக இருந்து வந்தது.
 
தற்போது, 4 நாட்களாக தங்கத்தின் விலை குறைய தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.1,554-க்கும், பவுன் 12 ஆயிரத்து 432-க்கும் விற்பனை ஆனது. இந்த நிலையில் நேற்று தங்கத்தின் விலை மேலும் வீழ்ச்சி அடைந்தது.
 
அதாவது, ஒரு கிராம் ரூ.1,501-க்கும், ஒரு பவுன் 12 ஆயிரத்து 8 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஒரே நாளில் மட்டும் பவுனுக்கு ரூ.424 ரூபாய் குறைந்து உள்ளது. கடந்த 4 நாட்களில் மட்டும் பவுனுக்கு 804 ரூபாய்க்கு மேல் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சமீப காலமாக தங்கத்தின் விலை இந்த அளவுக்கு குறைந்ததே கிடையாது.
 
இந்த விலை குறைவு சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, நேற்று நகை கடைகளில் வழக்கத்தை விட அதிகமான கூட்டம் காணப்பட்டது.

தங்கம் விலை உயர்வு

ஆனால் இன்று (gpg;.6)  மீண்டும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. ஒரு பவுனுக்கு ரூ. 128 உயர்ந்து ரூ. 12 ஆயிரத்து 136 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ. 1517 ஆக விற்கிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 24 ஆயிரத்து 860 ஆகவும், ஒரு கிராம் வெள்ளி ரூ. 26.60 ஆகவும் உள்ளது.(டிஎன்எஸ்)

Home  |  About Us  |  Contact Us  |  Subscribe