ஐதராபாத், பின்.8 (டிஎன்எஸ்) ஆந்திர மாநில அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட 4% இடஒதுக்கீட்டை ரத்து செய்து அந்த மாநில உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஆந்திராவில் கல்வி வேலை வாய்ன்பில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கன்பட்டது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் 2007-ம் ஆன்டு இந்த ஒதுக்கீடு சட்டம் அமலுக்கு கொண்டுவரப்பட்டது. இந்த இட ஒதுக்கீட்டை எதிர்த்து ஆந்திரா ஐகோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இவற்றை ஒன்றாக சேர்த்து உயர்நீதிமன்றம் 5 பேர் கொண்ட பெஞ்சு விசாரணை நடத்தியது. பின்னர் 7 பேர் கொன்ட பெஞ்சுக்கு மாற்றப்பட்டது. இதன் விசாரணை முடிந்து நீதிபதிகள் இன்று தீர்ன்பு கூறினார்கள்.
முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு செல்லாது என்று அவர்கள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர். பிற்படுத்தப்பட்டோ ர் பிரிவில் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கி இருப்பது ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை. இதை அமல்படுத்துவதில் சிக்கல் ஏற்படும். எனவே இது செல்லாது என்று கூறினார்கள்.
சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது எனவும் இந்தச் சட்டத்தை அமல்படுத்த முடியாது எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. எனினும் கடந்த 2007-ம் ஆண்டிலிருந்து இதுவரை இந்தச் சட்டப்படி இடஒதுக்கீடு பெற்றது செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2004-ம் ஆண்டு முதல் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை ஆந்திர உயர் நீதிமன்றம் ரத்து செய்வது மூன்றாவது முறையாகும். 2004-ல் ஆந்திர அரசு முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கியபோது, உயர் நீதிமன்றம் அதனை ரத்து செய்தது.
அதன்பிறகு நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, பிற்படுத்தப்பட்டோ ர் ஆணையம் மாற்றிமைக்கப்பட்டு முஸ்லிம்களுக்கு 5% இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. எனினும் மொத்த இடஒதுக்கீடு 50 சதவீதத்தைத் தாண்டுவதாகக் கூறி இந்த இடஒதுக்கீட்டை உயர்நீதிமன்றம் மீண்டும் ஒருமுறை ரத்து செய்தது.
இதன்பிறகு மொத்த இடஒதுக்கீட்டை 50 சதவீதத்துக்குள் அடக்கும்படியாக முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை 4 சதவீதமாக மாற்றியமைக்கப்பட்ட அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இந்த முறையும் இந்த இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டிருக்கிறது. (டிஎன்எஸ்)