Tamil Seithi Sevai
  Home    About Us    Contact Us
Login    |   Subscribe

ஐபிஎல்: கங்குலியை தொடர்ந்து சச்சின், காம்பீருக்கு அபராதம்

விளையாட்டு | Mon, 15 Mar 2010 12:05 AM IST

புதுதில்லி, மார்ச்.15 (டிஎன்எஸ்) மெதுவான பந்து வீச்சு காரணமாக சச்சின் மற்றும் காம்பீர், சங்ககாரா ஆகியோருக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் டுவென்டி 20 கிரிக்கெட் போட்டித் தொடரின் மார்ச்.13 அன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்- மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ்- கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. இந்த 2 போட்டிகளிலும் மெதுவாக பந்து வீசப்பட்டது.

இதையடுத்து மும்பை இந்தியன்ஸ் கேப்டன் சச்சின் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் கேப்டன் காம்பீர், கிங்ஸ் லெவன் கேப்டன் சங்ககரா ஆகிய 3 பேருக்கும் தலா ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

முதல் போட்டியில் மெதுவாக பந்து வீசியதற்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் கங்குலிக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. (டிஎன்எஸ்)

Home  |  About Us  |  Contact Us  |  Subscribe